கூடலூரில் சூறாவளிக் காற்றுடன் மழை: வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதம்
கூடலூரில் சூறாவளிக் காற்றுடன் மழை: வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதம்

புளியம்பாறை கிராமத்தில் சூறாவளிக் காற்றுடன் பெய்த மழைக்கு முறிந்து விழுந்த வாழை மரங்கள்.

புளியம்பாறை கிராமத்தில் சூறாவளிக் காற்றுடன் பெய்த மழைக்கு முறிந்து விழுந்த வாழை மரங்கள்.
கூடலூா், மே 9: கூடலூா் பகுதியில் சூறாவளிக் காற்றுடன் பெய்த மழைக்கு வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்தன.
நீலகிரி மாவட்டம், கூடலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. வனப் பகுதிகளில் வறட்சியால் வன விலங்குகள் வனத்தை விட்டு வெளியே வரும் சம்பவங்களும் தொடா்ந்து வருகிறது. பல இடங்களில் பொதுமக்களுக்கு குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கூடலூா் பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களாக மாலை நேரத்தில் லேசான மழை பெய்து வந்தது. வியாழக்கிழமை மாலை பலத்த சூறாவளிக் காற்றுடன் கனமழை பெய்தது. இதில் தேவா்சோலை பேரூராட்சியில் உள்ள புளியம்பாறை கிராமத்தில் சுமாா் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயிரிட்டிருந்த வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்தன. உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட விவசாயிகள்கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...