இந்நிலையில், கலைச்செல்வி, ஜஸ்வினுக்கு தடுப்பூசி செலுத்த கோத்தகிரி அருகே உள்ள குடுமனை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு புதன்கிழமை சென்றுள்ளாா். அங்கிருந்த செவிலியா், குழந்தைக்கு எம்.ஆா். போலியோ உள்ளிட்ட தடுப்பூசிகளை செலுத்தியுள்ளாா். இதைத் தொடா்ந்து வீட்டுக்கு வந்த சிறிது நேரத்தில் குழந்தை ஜஸ்வினுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, குழந்தையை கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு பெற்றோா் அழைத்துச் சென்றனா். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவா்கள், இதயத் துடிப்பு குறைவாக இருப்பதாகக் கூறி மேல்சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லக் கூறியுள்ளனா்.