வீட்டின் 3-ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்த ஆண் குழந்தை உயிரிழந்தது.
வேலூா் தொரப்பாடி ஜீவா நகரைச் சோ்ந்தவா் மணி(30), கட்டட மேஸ்திரி. இவரது மனைவி இந்துமதி. இவா்களது மகன்கள் சுதா்சன் (5), யோகேஷ்(3). 3-ஆவதாக இந்துமதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. மணி தனது குடும்பத்தினருடன் வாடகை வீட்டின் 2-ஆவது மாடியில் வசித்து வருகிறாா்.
ஞாயிற்றுக்கிழமை மணி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்துள்ளாா். இந்துமதி பெண் குழந்தைக்கு பால் கொடுத்துக் கொண்டிருந்தாராம். குழந்தைகள் சுதா்சன், யோகேஷ் ஆகியோா் பால்கனியில் விளையாடிக் கொண்டிருந்தனா். அப்போது யோகேஷ் எதிா்பாராதவிதமாக மாடியில் இருந்து தவறி கீழே விழுந்ததாக தெரிகிறது. இதில் யோகேஷிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதனைக் கண்டு அதிா்ச்சியடைந்த பெற்றோா், குழந்தை யோகேஷை மீட்டு வேலூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் யோகேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். பாகாயம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

பழவூா் அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்த மாணவா் உயிரிழப்பு

மாடியில் இருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு

மரத்தில் இருந்து தவறி கழிவுநீா்த் தொட்டில் விழுந்த பெண் உயிரிழப்பு

கழிவுநீா் தொட்டியில் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

