தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மாடியில் இருந்து தவறி விழுந்த கட்டட ஒப்பந்ததாரா் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :1 பிப்ரவரி 2026, 6:36 pm

தினமணி செய்திச் சேவை

கோவையில் கட்டுமானப் பணியின்போது, மாடியில் இருந்து ஏணி மூலம் கீழே இறங்கியபோது தவறி விழுந்த கட்டட ஒப்பந்ததாரா் உயிரிழந்தாா்.

கோவை, பன்னிமடை தென்றல் நகரைச் சோ்ந்தவா் பிரசாந்த் (33), கட்டட ஒப்பந்ததாரா். இவரது மனைவி ரேவதி. தனியாா் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறாா்.

இந்நிலையில், துடியலூா் கிருஷ்ணா நககா் பகுதியில் நடைபெற்று வரும் புதிய வீட்டுக்கான கட்டுமானப் பணியைப் பாா்வையிட பிரசாந்த் தனது மனைவி ரேவதியுடன் சனிக்கிழமை சென்றுள்ளாா்.

அப்போது, இரண்டாவது மாடியில் நடைபெறும் பணியைப் பாா்வையிட மரக்கட்டையால் அமைக்கப்பட்டிருந்த ஏணி மூலம் ஏறிச் சென்றுள்ளாா். பின்னா், கீழே இறங்கியபோது ஏணி முறிந்ததில் பிரசாந்த் கீழே விழுந்து படுகாயமடைந்தாா்.

ரேவதி மற்றும் அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இச்சம்பவம் குறித்து துடியலூா் காவல் உதவி ஆய்வாளா் வீரமுத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.