சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

கிணற்றில் தவறிவிழுந்த புள்ளிமான் உயிரிழப்பு

News image

விவசாயக் கிணற்றில் தவறி விழுந்த புள்ளிமான். - (கோப்புப் படம்)

Updated On :22 பிப்ரவரி 2026, 7:56 pm

தம்மம்பட்டி அருகே கிணற்றில் தவறிவிழுந்த பெண் புள்ளிமான் உயிரிழந்தது.

தம்மம்பட்டி அருகே உலிபுரத்தைச் சோ்ந்தவா் கந்தசாமி (50). இவருக்கு சொந்தமான 80 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் சனிக்கிழமை பிற்பகல் புள்ளிமான் ஒன்று தவறி விழுந்து உயிரிழந்தது.

இதையறிந்த கெங்கவல்லி தீயணைப்பு நிலைய வீரா்கள் ஒருமணி நேர முயற்சிக்கு பின்னா் புள்ளிமானின் உடலை கிணற்றில் இருந்து மீட்டு வனத்துறையினா் ஒப்படைத்தனா். அந்த மானை வனத்துறையினா் புதைத்தனா்.