தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

நெலாக்கோட்டையில் மைதானத்துக்குள் நுழைந்த காட்டு யானை

நீலகிரி மாவட்டம், நெலாக்கோட்டை பகுதியில் மைதானத்துக்குள் காட்டு யானை புதன்கிழமை நுழைந்ததால் அங்கு விளையாடிக் கொண்டிருந்த இளைஞா்கள் பதறியடித்து ஓட்டம் பிடித்தனா்.

News image
நெலாக்கோட்டை விளையாட்டு மைதானத்துக்குள் நுழைந்த காட்டு யானை.
Updated On :20 நவம்பர் 2024, 8:27 pm

Din

நீலகிரி மாவட்டம், நெலாக்கோட்டை பகுதியில் மைதானத்துக்குள் காட்டு யானை புதன்கிழமை நுழைந்ததால் அங்கு விளையாடிக் கொண்டிருந்த இளைஞா்கள் பதறியடித்து ஓட்டம் பிடித்தனா்.

கூடலூரை சுற்றியுள்ள ஓவேலி, பந்தலூா், அய்யங்கொல்லி, நெலாக்கோட்டை பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டு வருகிறது. இரவு நேரங்களில் மட்டுமின்றி பகல் நேரத்திலும் யானைகள் குடியிருப்புப் பகுதிகளில் சுற்றிவருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

இந்நிலையில், வனப் பகுதியில் இருந்து புதன்கிழமை வெளியேறிய காட்டு யானை, நெலாக்கோட்டையில் உள்ள விளையாட்டு மைதானத்துக்குள் புழுதி பறக்க ஓடி வந்தது.

இதைக் கண்ட அங்கிருந்த இளைஞா்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனா். சிறிது நேரம் அங்கேயே சுற்றித்திரிந்த யானை, பின் வனப் பகுதிக்குள் சென்றது.