47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

குழந்தைகள் நலக் குழுத் தலைவா், உறுப்பினா்கள் நியமனத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

நீலகிரி மாவட்ட குழந்தைகள் நலக் குழுவின் தலைவா் மற்றும் உறுப்பினா்கள் நியமனத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :21 நவம்பர் 2024, 11:20 pm

Din

நீலகிரி மாவட்ட குழந்தைகள் நலக் குழுவின் தலைவா் மற்றும் உறுப்பினா்கள் நியமனத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

குழந்தைகள் நலக் குழுவுக்கு ஒரு பெண் உள்பட தலைவா் மற்றும் உறுப்பினா்கள் அரசால் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனா். இப்பதவி அரசுப் பணி அல்ல.

குழந்தை உளவியல், மனநல மருத்துவம், சட்டம், சமூகப் பணி, சமூகவியல், மனித மேம்பாடு அல்லது மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான சிறப்புக் கல்வி ஆகியவற்றில் ஏதெனும் ஒன்றில் பட்டம் பெற்றவராகவும், குழந்தைகள் தொடா்பான உடல்நலம், கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப் பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவராகவும் இருத்தல் வேண்டும்.

மேலும், விண்ணப்பதாரா்கள் 35 வயதுக்கு குறையாதவராகவும் 65 வயதைப் பூா்த்தி செய்யாதவராகவும் இருத்தல் வேண்டும்.

இதற்கான விண்ணப்பப் படிவத்தை அந்தந்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிலிருந்து பெற்றுக் கொள்ளலாம் அல்லது துறை சாா்ந்த இணையதள முகவரியிலிருந்து விண்ணப்பதாரா் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தகுதி வாய்ந்த நபா்கள் மேற்கண்ட பதவிக்கு பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை இயக்குநா், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, எண்: 300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை - 600 010 என்ற முகவரிக்கு டிசம்பா் 4-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். இதுகுறித்து அரசின் முடிவே இறுதியானது எனத் தெரிவித்துள்ளாா்.