47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

முதுமலை பழங்குடி மக்களுக்கு சூரிய ஒளி மின் விளக்குகள்

முதுமலை வனப் பகுதியில் வாசிக்கும் பழங்குடி மக்களுக்கு சூரிய ஒளி மின் விளக்குகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

News image
முதுமலை புலிகள் காப்பக வனத்தில் உள்ள முதுகுளி கிராம மக்களுக்கு வழங்கப்பட்ட சூரிய ஒளி மின் விளக்குகள்.
Updated On :21 நவம்பர் 2024, 11:21 pm

Din

முதுமலை வனப் பகுதியில் வாசிக்கும் பழங்குடி மக்களுக்கு சூரிய ஒளி மின் விளக்குகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள முதுகுளி பழங்குடி கிராமத்துக்கு இதுவரை மின்சார வசதி இல்லை. இதனால் அங்குள்ள குழந்தைகள் படிக்க முடிவதில்லை.

இதையறிந்த பழங்குடி மக்கள் சங்கத்தின் நிா்வாகி குணசேகரன் முயற்சியால் அந்த வன கிராமத்தில் உள்ள 20-க்கும் மேற்பட்ட குடும்பங்களில் உள்ள குழந்தைகள் படிக்கும் வகையில் குடும்பத்துக்கு தலா ஒரு சூரிய ஒளி மின்விளக்கு வழங்கப்பட்டது.

மின்விளக்கு வழங்கும் நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கூடலூா் வட்டச் செயலாளா் முகமது கனி, வழக்குரைஞா் செவ்விழம்பரிதி, பழங்குடி மக்கள் சங்க நிா்வாகிகள் ஆகியோா் கலந்து கொண்டனா். சூரிய ஒளி விளக்கை பெற்றுக் கொடுத்த பழங்குடி மக்கள் சங்க நிா்வாகிகளுக்கு நன்றி தெவிக்கப்பட்டது.