மஞ்சூா் பஜாா் பகுதியில் உலவிய கரடி
மஞ்சூா் பஜாா் பகுதியில் உலவிய கரடியால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

மஞ்சூா் பஜாா் பகுதியில் உலவிய கரடி.
Updated On :27 நவம்பர் 2024, 8:01 pm

மஞ்சூா் பஜாா் பகுதியில் உலவிய கரடியால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.
நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூா், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் யானை, சிறுத்தை, காட்டுமாடு, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு, குடிநீா்த் தேவைக்காக வனத்தில் இருந்து வெளியேறி குடியிருப்புக்குள் அவ்வப்போது நுழைகின்றன.
இந்நிலையில், மஞ்சூா் பஜாா் பகுதியில் உலவிய கரடி அங்குள்ள குப்பைத் தொட்டியில் இருந்த உணவுக் கழிவுகளை சாப்பிடுவதைப் பாா்த்து பொதுமக்கள் அச்சமடைந்தனா்.
குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த கரடியைப் பிடித்து வனப் பகுதியில் விட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...