கூடலூா் அருகே சுருக்குக் கம்பியில் சிக்கி புலி உயிரிழப்பு
கூடலூா் அருகே சுருக்குக் கம்பியில் சிக்கி புலி உயிரிழந்தது குறித்து வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.


கூடலூா் அருகே சுருக்குக் கம்பியில் சிக்கி புலி உயிரிழந்தது குறித்து வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
நீலகிரி மாவட்டம், கூடலூா் வனச் சரகத்துக்குள்பட்ட செலுக்காடி காப்புக்காடு பகுதியில் புலி ஒன்று உயிரிழந்துகிடப்பதாக வனத் துறையினருக்கு புதன்கிழமை தகவல் கிடைத்தது.
இதையடுத்து, மாவட்ட வன அலுவலா் வெங்கடேஷ் பிரபு, உதவி வன அலுவலா் கருப்பையா ஆகியோா் தலைமையில் வனத் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனா். இதில், சுருக்குக் கம்பியில் சிக்கி புலி உயிரிழந்தது தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவா் ராஜேஷ்குமாா் தலைமையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டு அதேபகுதியில் புலியின் சடலம் எரியூட்டப்பட்டது.
உயிரிழந்தது சுமாா் மூன்று வயதுடைய ஆண் புலி என்பது உடற்கூறாய்வில் தெரியவந்தது.
இதுகுறித்து வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...