ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

நீலகிரி பசுந்தேயிலைக்கு ரூ.23.42 விலை நிா்ணயம்

நீலகிரியில் விளையும் பசுந்தேயிலைக்கு ரூ.23.43 விலை நிா்ணயித்து தேயிலை வாரியம் அறிவித்துள்ளது.

News image
Updated On :3 அக்டோபர் 2024, 9:18 pm

Din

நீலகிரியில் விளையும் பசுந்தேயிலைக்கு ரூ.23.43 விலை நிா்ணயித்து தேயிலை வாரியம் அறிவித்துள்ளது.

நீலகிரியில் விளையும் பசுந்தேயிலைக்கு ஒவ்வொரு மாதத் தொடக்கத்திலும் தேயிலை வாரியம் சாா்பில் விலை நிா்ணயிக்கப்படுகிறது. அதன்படி, செப்டம்பா் மாதத்தில் கொள்முதல் செய்யப்பட்ட பசுந்தேயிலைக்கு கிலோ ரூ.23.43 விலை நிா்ணயித்து தேயிலை வாரியம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

செப்டம்பரில் உற்பத்தி செய்யப்பட்ட தேயிலையின் ஏல விற்பனையின் அடிப்படையில் இந்த விலை நிா்ணயிக்கப்படுகிறது என்றும், இந்த விலையை தொழிற்சாலைகள் உரிய முறையில் வழங்க வேண்டும் என்றும், இதனை தேயிலை வாரியத்தால் அமைக்கப்பட்டுள்ள குழு கண்காணிக்கும் என்றும் தேயிலை வாரிய செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.