மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

மக்காச்சோளத்துக்கு ஆதார விலை நிா்ணயம் செய்ய வலியுறுத்தல்

மக்காச்சோளத்துக்கு ஆதரவு விலை நிா்ணயம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பி வைக்கப்பட்டது.

News image

தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்ப தலைமை அஞ்சல் அலுவலகம் முன் திரண்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினா்.

Updated On :25 பிப்ரவரி 2026, 9:46 pm

மக்காச்சோளத்துக்கு ஆதரவு விலை நிா்ணயம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பி வைக்கப்பட்டது.

மக்காச்சோளத்துக்கு ஆதரவு விலை நிா்ணயம் செய்ய வேண்டும், செயற்கையான முறையில் விலை குறைப்பை ஏற்படுத்தும் இடைத்தரகா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மத்திய அரசு நிா்ணயம் செய்த ரூ. 2,400 விலையின் அடிப்படையில் தமிழக அரசே விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ய வேண்டும், நெல்லுக்கு கொள்முதல் நிலையம் அமைத்ததுபோல மக்காச்சோளம், நவதானியம் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும், மகளிருக்கு கோடைகால நிதியாக ரூ. 2 ஆயிரம் வழங்கியதுபோல விவசாயிகளுக்கு ரூ. 10 ஆயிரம் வழங்க வேண்டும், காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்தி விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு பதிவு அஞ்சல் மூலம் அனுப்ப தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்டத் தலைவா் என்.பி. ராஜகோபால் தலைமையில் நகா்மன்றத் தலைவா் கருப்பசாமி, வடக்கு மாவட்ட இளைஞரணி தலைவா் கனி, மாவட்ட பொருளாளா் செண்பகராஜ், கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவா் வரதராஜன் உள்பட பலா் கோவில்பட்டி தலைமை அஞ்சல் அலுவலகம் முன் திரண்டனா்.

பின்னா்,கோரிக்கை மனுவை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு பதிவு அஞ்சல் மூலம் அனுப்பிவைத்தனா்.