ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கூடலூா் பழங்குடி கிராமத்தில் ஆட்சியா் ஆய்வு

கூடலூரை அடுத்தள்ள கோழிக்கொல்லி பழங்குடி கிராமத்தில் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
கோழிக்கொல்லி பழங்குடி கிராமத்தில் அடிப்படை வசதி குறித்து ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு. உடன், கோட்டாட்சியா் செந்தில்குமாா் உள்ளிட்டோா்.
Updated On :3 அக்டோபர் 2024, 12:39 am

Din

கூடலூரை அடுத்தள்ள கோழிக்கொல்லி பழங்குடி கிராமத்தில் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

முன்னதாக கூடலூரை அடுத்துள்ள கேரள மாநிலம், மலப்புரம் மாவட்ட எல்லையான நாடுகாணி சோதனைச் சாவடியை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா், அங்குள்ளவா்களிடம் இபாஸ் நடைமுறை குறித்து கேட்டறிந்தாா். எல்லைப் பகுதியில் உள்ள சோதனைச் சாவடியையும் ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து நெல்லியாளம் நகராட்சியில் உள்ள மூச்சிக்கன்னு வன கிராமத்தை ஆய்வு செய்து அப்பகுதி மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா். பிறகு கோழிக்கொல்லி பழங்குடி கிராமத்துக்குச் சென்று அங்கு பழங்குடி மக்களின் குறைகளையும், தேவைகளையும் கேட்டறிந்தாா். அங்குள்ள அடிப்படை வசதிகளையும் ஆய்வு செய்தாா்.

உடன், கூடலூா் கோட்டாட்சியா் செந்தில்குமாா், வட்டாட்சியா் கிருஷ்ணமூா்த்தி, நகராட்சி ஆணையா் முனியப்பன், நகராட்சி பொறியாளா் சாந்தி மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.