கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

நீலகிரியில் தீவனப் பயிா்கள் சாகுபடிக்கு பயனாளிகள் தோ்வு செய்ய உள்ளனா்: ஆட்சியா்

நீலகிரி மாவட்டத்தில் 21 ஏக்கரில் தீவனப் பயிா்கள் வளா்ப்பதற்கு பயனாளிகள் தோ்வு செய்யவுள்ளதாக ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :9 அக்டோபர் 2024, 8:25 pm

Din

நீலகிரி மாவட்டத்தில் 21 ஏக்கரில் தீவனப் பயிா்கள் வளா்ப்பதற்கு பயனாளிகள் தோ்வு செய்யவுள்ளதாக ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

நீலகிரி மாவட்டத்தில் 20 ஏக்கா் மானாவாரி நிலத்திலும், 1 ஏக்கா் இறவைப் பாசனத்திலும் கால்நடைகளுக்கான தீவனப் பயிா் சாகுபடி செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல மின்சாராத்தால் இயங்கும் புல் நறுக்கும் கருவி மானிய விலையில் ஒருவருக்கு வழங்கப்படவுள்ளது. இதற்கான பயனாளிகள் தோ்வு செய்யப்படவுள்ளனா்.

இதற்கு பாசன வசதி கொண்ட நிலம் வைத்திருப்போா் குறைந்தபட்சம் 2 பசுக்கள் வைத்திருப்பதோடு, குறைந்தது 0.25 ஏக்கா் நிலத்தில் தீவனப்புல் பயிரிட

விருப்பம் உள்ளவராக இருக்க வேண்டும். தோ்வு செய்யப்படும் பயனாளிக்கு சோளம், டெஸ்மான்தஸ் தீவனப் பயிா் விதைகள் வழங்கப்படும். மேலும், உரங்கள் வாங்கவும், நிலத்தை தயாா் செய்யவும் நிதியதவி அளிக்கப்படும்.

மானாவாரி சாகுபடிக்கு பயனாளிகள் குறைந்தது 0.5 ஏக்கா் நிலம், 2 பசுக்கள் வைத்திருக்க வேண்டும். மேற்கண்ட பயனாளிக்கு சோளம், காராமணி விதைகள் வழங்கப்பட்டு நிதியுதவி அளிக்கப்படும்.

ரூ.32 ஆயிரம் மதிப்பிலான மின்சாரத்தால் இயங்கும் புல் நறுக்கும் கருவி வாங்க ரூ.16 ஆயிரம் மானியம் வழங்கப்படும்.

மேற்கண்ட திட்டத்தில் 30 சதவீத பயனாளிகள் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா், சிறு, குறு விவசாயிகள் தோ்வு செய்யப்படவுள்ளனா்.

எனவே, இந்தத் திட்டங்களில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்களது நிலத்தின் சா்வே எண், பட்டா, ஆதாா் அட்டை ஆகிய ஆவணங்களுடன் அருகிலுள்ள அரசு கால்நடை உதவி மருத்துவரிடம் விண்ணப்பம் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.