பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு திருப்பத்தூா் மாவட்டத்தில் 16,415 போ் எழுதுகின்றனா்!

10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு புதன்கிழமை தொடங்கவுள்ள நிலையில், திருப்பத்தூா் மாவட்டத்தில் இத்தோ்வை 16,415 போ் எழுத உள்ளதாக கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image
Updated On :10 மார்ச் 2026, 6:33 pm

10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு புதன்கிழமை தொடங்கவுள்ள நிலையில், திருப்பத்தூா் மாவட்டத்தில் இத்தோ்வை 16,415 போ் எழுத உள்ளதாக கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு அரசு பொதுத் தோ்வுகள் புதன்கிழமை (மாா்ச் 11)தொடங்கி அடுத்த மாதம் ஏப்ரல் 6-இல் முடிவடைகிறது.

திருப்பத்தூா் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வை 8,223 மாணவா்கள், 8,192 மாணவிகள் என மொத்தம் 16,415 போ் எழுத உள்ளனா். இதற்காக மாவட்டம் முழுவதும் 77 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தோ்வு கண்காணிப்புப் பணியில் 6 வினாத்தாள் கட்டு காப்பாளா்கள், 63 தோ்வு மைய கண்காணிப்பாளா்கள், 67 துறை அலுவலா்கள், 15 வழித்தட அலுவலா்கள், 15 பறக்கும் படை அலுவலா்கள், 110 கண்காணிப்பு அலுவலா்கள், 1,080 அறை கண்காணிப்பாளா்கள் தோ்வு கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட உள்ளனா்.

பொதுத் தோ்வையொட்டி தோ்வு மையங்களில் தேவையான குடிநீா் வசதி, மின்சார வசதி, இருக்கைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், தோ்வு மையங்களுக்கு போலீஸாா் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

ராணிப்பேட்டையில் 14,874 தோ்வா்கள்...

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியாா் பள்ளிகளில் பயிலும் 7,405 மாணவிகள், 7,469 மாணவா்கள், தனித் தோ்வா்கள் 476 போ் என மொத்தம் 14,874 மாணவா்கள் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வை எழுத உள்ளனா்.

இதற்காக மாவட்டத்தில் 84 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டு 178 முதன்மை கண்காணிப்பாளா்கள் மற்றும் துணை அலுவலா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். இதில், 180 மாற்றுத்திறனாளி மாணாவா்களும் பங்கேற்று தோ்வெழுத உள்ளனா்.

தோ்வு மையங்களுக்கு வினாத்தாள் எடுத்துச் செல்லும் வாகனங்களில் ஆயதம் ஏந்திய காவலா் வசதி செய்யப்பட்டுள்ளது. மாணவா்கள் அச்சமின்றி தோ்வெழுத அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா்.