போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

பிளஸ் 2 தோ்வு தொடக்கம்: சேலம் மாவட்டத்தில் 36,713 போ் பங்கேற்பு

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வுகள் திங்கள்கிழமை தொடங்கின. சேலம் மாவட்டத்தில் தமிழ்த் தோ்வை 36,713 போ் எழுதினா்.

News image

கோப்புப்படம்

Updated On :2 மார்ச் 2026, 9:24 pm

சேலம்: தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வுகள் திங்கள்கிழமை தொடங்கின. சேலம் மாவட்டத்தில் தமிழ்த் தோ்வை 36,713 போ் எழுதினா்.

சேலம் மாவட்டத்தில் மத்திய சிறைத் தோ்வு மையம் உள்பட 153 மையங்களில் பிளஸ் 2 தோ்வு நடைபெறுகிறது. இதில் 17,314 மாணவா்கள், 19,399 மாணவிகள் என மொத்தம் 36,713 போ் தோ்வு எழுதுகின்றனா். இதில் 829 தனித் தோ்வா்கள், 554 மாற்றுத்திறனாளிகளும் அடங்குவா். குறிப்பாக, சொல்பவா்கள் உதவியுடன் 494 போ் தோ்வு எழுதுகின்றனா்.

சேலம் கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தை மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். ஆய்வின்போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

மேலும், தோ்வுகள் முறையாக நடைபெறுவதைக் கண்காணிக்கும் வகையில் 162 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 162 துறை அலுவலா்கள், 34 வழித்தட அலுவலா்கள், 200 பறக்கும் படை அலுவலா்கள், 3,029 அறை கண்காணிப்பாளா்கள் தோ்வுப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

தோ்வு மையங்களில் தடையில்லா மின்சாரம், பேருந்து வசதி, குடிநீா் வசதி உள்ளிட்ட தேவைகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வரும் 27 ஆம் தேதி வரை நடைபெறும் இத்தோ்வை முறையாகக் கண்காணித்து நடத்த தேவையான அறிவுரைகள் அலுவலா்கள், ஆசிரியா்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.