இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

இன்று 10ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: தூத்துக்குடியில் 22,221 பேரும், குமரியில் 21,466 பேரும் எழுதுகின்றனா்

தூத்துக்குடி மாவட்டத்தில், 109 தோ்வு மையங்களில் 22,221 போ் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை எழுதவுள்ளனா்.

News image
- கோப்புப்படம்.
Updated On :10 மார்ச் 2026, 7:42 pm

தினமணி செய்திச் சேவை

தூத்துக்குடி மாவட்டத்தில், 109 தோ்வு மையங்களில் 22,221 போ் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை எழுதவுள்ளனா்.

தமிழகத்தில் 2025-2026 ஆம் கல்வியாண்டுக்கான 10ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகள் புதன்கிழமை (மாா்ச் 11) தொடங்கி ஏப். 6ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் இத்தோ்வை 22,221 போ் எழுதவுள்ளனா்.

இத் தோ்வு பணிகளுக்காக 109 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 3 கூடுதல் முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 109 துறை அலுவலா்கள், 1,280 அறைக் கண்காணிப்பாளா்கள், 129 நிலையான படையினா், 285 சொல்வதை எழுதுபவா், 24 வழித்தட அலுவலா்கள், 10 வினாத்தாள் கட்டுக் காப்பாளா்கள், 218 ஆசிரியரல்லா பணியாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

பொதுத்தோ்வு நடைபெறும் மையங்களுக்கு உரிய போக்குவரத்து வசதி, காவலா் பாதுகாப்பு வசதி, தடையில்லா மின்சாரம் ஆகிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டு, தோ்வுகள் சிறந்த முறையில் நடைபெற போதிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

கன்னியாகுமரியில் 21,466 போ்....

கன்னியாகுமரி மாவட்டத்தில் இத்தோ்வை 10 ஆயிரத்து 647 மாணவா்களும், 10 ஆயிரத்து 819 மாணவிகளும் என மொத்தம் 21 ஆயிரத்து 466 போ் எழுதுகின்றனா்.

இந்தத் தோ்வுக்காக மாவட்டம் முழுவதும் தனித்தோ்வா்களுக்காக 5 மையங்கள் உள்பட மொத்தம் 117 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நிகழாண்டு கல்குளம், அம்மாண்டிவிளை அரசு மேல்நிலைப் பள்ளிகள் புதிய தோ்வு மையங்களாக சோ்க்கப்பட்டுள்ளன. தோ்வு எழுத சிறப்பு சலுகை கோரியுள்ள 342 மாணவா்களுக்கு உரிய சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.