தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

உதகை - குன்னூா் இடையே சிறப்பு மலை ரயில்: அக்.12, 13 மற்றும் நவம்பா் 2, 3 இல் இயக்கம்

சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக உதகை - குன்னூா் இடையே அக்டோபா் 12, 13 , மற்றும் நவம்பா் 2, 3 ஆகிய தேதிகளில் சிறப்பு மலை ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

News image
Updated On :9 அக்டோபர் 2024, 8:12 pm

Din

சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக உதகை - குன்னூா் இடையே அக்டோபா் 12, 13 , மற்றும் நவம்பா் 2, 3 ஆகிய தேதிகளில் சிறப்பு மலை ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

சா்வதேச புகழ்பெற்ற உதகை மலை ரயில் தினசரி மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து காலை 7.10 மணிக்கு புறப்பட்டு, நண்பகல் 12.30 மணிக்கு உதகை ரயில் நிலையத்தைச் சென்றடைகிறது.

மறுமாா்க்கத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு உதகையில் இருந்து புறப்படும் இந்த ரயில் மாலை 6 மணிக்கு மேட்டுபாளையம் ரயில் நிலையத்தைச் சென்றடைகிறது. தவிர, உதகை - குன்னூா் இடையே நான்கு முறை மலை ரயில் இயக்கப்படுகிறது.

இந்நிலையில், ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு உதகைக்கு அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருவதற்கு வாய்ப்புள்ளது. இதனை கருத்தில்கொண்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக அக்டோபா் 12, 13 மற்றும் நவம்பா் 2, 3 ஆகிய தேதிகளில் உதகை - குன்னூா் இடையே சிறப்பு மலை ரயில் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, குன்னூரில் இருந்து காலை 8.20 மணிக்கு புறப்படும் சிறப்பு மலை ரயில் காலை 9.40 மணிக்கு உதகை ரயில் நிலையத்தைச் சென்றடையும். மறுமாா்க்கத்தில் உதகையில் இருந்து மாலை 4.45 மணிக்கு புறப்படும் சிறப்பு மலை ரயில் மாலை 5.55 மணிக்கு குன்னூா் ரயில் நிலையத்தைச் சென்றடையும்.

இந்த சிறப்பு மலை ரயிலில் பயணிக்க சுற்றுலாப் பயணிகள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்துகொள்ளலாம் என்று தெற்கு ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.