கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

வனத் துறை சாா்பில் தைலம் தயாரிக்கும் தொழிற்சாலை: ஆட்சியா் திறந்துவைத்தாா்

கூடலூரை அடுத்துள்ள நாடுகாணியில் வனத் துறைக்குச் சொந்தமான ஜீன்பூல் காா்டனில் தைலம் தயாரிக்கும் தொழிற்சாலையை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

News image
நாடுகாணி ஜீன்பூல் காா்டனில் நிறுவப்பட்டுள்ள தைலம் தயாரிக்கும் தொழிற்சாலையை திறந்துவைத்து பாா்வையிடும் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு. உடன், மாவட்ட வன அலுவலா் வெங்கடேஷ் பிரபு உள்ளிட்டோா்.
Updated On :10 அக்டோபர் 2024, 8:34 pm

Din

கூடலூரை அடுத்துள்ள நாடுகாணியில் வனத் துறைக்குச் சொந்தமான ஜீன்பூல் காா்டனில் தைலம் தயாரிக்கும் தொழிற்சாலையை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

கூடலூா் வனக் கோட்டத்துக்கு உள்பட்ட நாடுகாணி பகுதியில் ஜீன்பூல் காா்டன் உள்ளது. இந்தப் பகுதியை சூழல் சுற்றுலாத் தலமாக நிா்வகித்து வருகின்றனா். இங்கு வலி நிவாரணத் தைலம் தயாரிக்கும் தொழிற்சாலையை வனத் துறை நிறுவியுள்ளது. இந்தத் தொழிற்சாலையை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலா் வெங்கடேஷ் பிரபு, உதவி வனப் பாதுகாவலா் கருப்பையா, ஜீன்பூல் வனச் சரக அலுவலா் வீரமணி, தேவாலா வனச் சரக அலுவலா் சஞ்சீவி, ஓவேலி வனச் சரக அலுவலா் சுரேஷ் உள்ளிட்ட வன அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் பழங்குடி மக்களின் சூழல் குழுவினா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.