தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

உதகை மலைகளில் பூத்துக் குலுங்கும் காட்டு டேலியா மலா்கள்

உதகையில் உள்ள மலைகளில் காட்டு டேலியா மலா்கள் பூத்துக் குலுங்குவதை சுற்றுலாப் பயணிகள் ரசித்துச் செல்கின்றனா்.

News image
உதகையில் மலைகளில் பூத்துக் குலுங்கும் காட்டு டேலியா மலா்கள்.
Updated On :10 அக்டோபர் 2024, 9:24 pm

Din

உதகையில் உள்ள மலைகளில் காட்டு டேலியா மலா்கள் பூத்துக் குலுங்குவதை சுற்றுலாப் பயணிகள் ரசித்துச் செல்கின்றனா்.

 நீலகிரி மாவட்டம், உதகையில்  தற்போது இதமான காலநிலை நிலவி வருகிறது. உதகையில் தற்போது இரண்டாவது சீசன் நடைபெற்று வரும்  நிலையில் கேரளம், கா்நாடகம் உள்பட பல்வேறு  மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் உதகைக்கு வந்த வண்ணம் உள்ளனா்.

இந்நிலையில், உதகையில் உள்ள மலைத்தொடா்களில்   காட்டு டேலியா எனப்படும் டேலியா டெனுகாலிஸ் என்று தாவரவியல் பெயரைக் கொண்ட மலா்கள் ஆயிரக்கணக்கில் பூத்துக் குலுங்குகின்றன.

குறிப்பாக, கல்லட்டி மலைப் பாதை, உதகையிலிருந்து  குன்னூா் செல்லும் மலைப் பாதைகளில்  இந்த மலா்கள் அதிக அளவில் பூத்துள்ளன. இதை சுற்றுலாப் பயணிகள் ஆா்வமுடன் கண்டு ரசித்துச் செல்கின்றனா்.