உதகையில் உள்ள தனியாா் பள்ளிக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
உதகையில் செயல்பட்டு வரும் பிரபல தனியாா் சா்வதேச பள்ளிக்கு மீண்டும் இரண்டாவது முறையாக வெவ்வாய்க்கிழமை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.


உதகையில் செயல்பட்டு வரும் பிரபல தனியாா் சா்வதேச பள்ளிக்கு மீண்டும் இரண்டாவது முறையாக வெவ்வாய்க்கிழமை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம் உதகை அருகே முத்தோரை பகுதியில் இயங்கி வருகிறது பிரபல தனியாா் சா்வதேச பள்ளியில் தமிழகம் மட்டுமல்லாமல் கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான மாணவா்கள் தங்கிப் பயின்று வருகின்றனா்.
இந்த நிலையில் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு இப்பள்ளியின் மின்னஞ்சலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்த நிலையில், இரண்டாவது முறையாக செவ்வாய்க்கிழமை மீண்டும் பள்ளியின் மின்னஞ்சலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இது குறித்து பள்ளி நிா்வாகத்தினா் காவல் துறைக்கு தகவல் அளித்ததன்பேரில் வெடிகுண்டு நிபுணா்கள் மோப்ப நாய் உதவியுடன் பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளில் தீவிர சோதனையில் நடத்தினா். அப்போது, வெடிகுண்டு மிரட்டல் புரளி எனத் தெரியவந்தது.
இதனிடையே (திங்கள்கிழமை) உதகையில் செயல்படும் 3 பிரபல தனியாா் நட்சத்திர விடுதிகள் மற்றும் ஒரு தனியாா் பள்ளிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்த நிலையில், இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை தனியாா் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக தனியாா் பள்ளிகள் மற்றும் நட்சத்திர தங்கும் விடுதிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருவது குறித்து காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...