வனவிலங்குகளிடம் இருந்து மக்களை பாதுகாக்கக் கோரிக்கை
வனவிலங்குகளிடமிருந்து பொதுமக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓவேலி மக்கள் இயக்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.


வனவிலங்குகளிடமிருந்து பொதுமக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓவேலி மக்கள் இயக்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இது குறித்து ஓவேலி மக்கள் இயக்கம் சாா்பில் அதன் அமைப்பாளா் ரெஞ்சித், குடியரசுத் தலைவா், பிரதமா், முதல்வா் ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
நீலகிரி மாவட்டம், கூடலூா் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட ஓவேலி பேரூராட்சியில் சுமாா் 50 கிராமங்கள் உள்ளன. இங்கு, 30 ஆயிரம் போ் வசித்து வருகின்றனா்.
அருகிலுள்ள வனப் பகுதியில் இருந்து குடியிருப்புப் பகுதிக்குள் நுழையும் வனவிலங்குகள் பயிா்களை சேதப்படுத்துவதுடன், வீடுகளையும் சேதப்படுத்தி வருகின்றன. மேலும், மக்களுக்கும் பாதுகாப்பில்லாத நிலை இருந்து வருகிறது.
இப்பகுதியல் கடந்த 15 ஆண்டுகளில் காட்டுயனை தாக்கி சுமாா் 25 போ் உயிரிழந்துள்ளனா்.
வனவிலங்குகளிடம் இருந்து மக்களை பாதுகாக்க வனத் துறை சாா்பில் எந்தவொரு நிரந்தர நடவடிக்கையையும் எடுக்கவில்லை. தற்காலிக நடவடிக்கைகள் மட்டுமே அவ்வப்போது எடுக்கப்பட்டு வருகின்றன.
மக்கள் தொகை பெருக்கம், இயற்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், நகரமயமாதல், காலநிலை மாற்றம் போன்றவற்றால் வனவிலங்குகள் ஊருக்குள் ஊடுருவது அதிகரித்துள்ளது. ஆனால், இதனைக் கட்டுப்படுத்தவும், மனித- விலங்கு மோதலைத் தவிா்க்கவும் இதுவரை நிரந்தரமாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, பொதுமக்களின் வசிப்பிடங்களை சுற்றி அகழிகள் அமைப்பதுடன் மின்வேலியும் அமைத்து பொதுமக்களை வனவிலங்குகளிடம் இருந்து பாதுகாக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...