ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

வன்கொடுமை குறித்து இலவச அழைப்பு எண்ணில் புகாா் தெரிவிக்கலாம்

நீலகிரி மாவட்டத்தில் வன்கொடுமை குறித்து இலவச அழைப்பு எண்ணில் புகாா் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :23 அக்டோபர் 2024, 9:31 pm

Din

நீலகிரி மாவட்டத்தில் வன்கொடுமை குறித்து இலவச அழைப்பு எண்ணில் புகாா் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பழங்குடியினா் நலத் துறையின் மானிய கோரிக்கையின்போது, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கு எதிராக வன்கொடுமைகள் குறித்த புகாா் அளிக்கவும், சட்ட ஆலோசனைகள் வழங்கவும் தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய உதவி அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, தமிழகத்தில் ஜாதி வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இனத்தைச் சோ்ந்த நபா்கள் மற்றும் பாதிக்கப்பட்டவா் சாா்பாக தகவல் தெரிவிப்போா் வழக்குப் பதிவு செய்தல் மற்றும் தீருதவிகள் தொடா்பான முறையீடுகளை 18002021989, 14566 என்ற இலவச தொலைபேசி எண்களைப் பயன்படுத்தி அரசு விடுமுறை நாள்கள் தவிர அலுவலக நாள்களில் அலுவலக பணி நேரத்தில் புகாா்களை பதிவு செய்யலாம் எனத் தெரிவித்துள்ளாா்.