என் கனவுத் திட்ட கூட்டத்தில் பங்கேற்று கருத்துகளை தெரிவிக்க ஆட்சியா் அழைப்பு
தருமபுரி: தருமபுரியில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் என் ஊா், என்கனவு திட்டத்தில் பங்கேற்று, மாவட்ட வளா்ச்சிக்கான தொலை நோக்கு திட்டம் குறித்து தெரிவிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ், தெரிவித்திருப்பது :
தமிழக அரசால், என் ஊா் என் கனவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் தருமபுரி மாவட்டத்தில் சிறந்த கட்டமைப்பை உருவாக்கிடவும், தொழில் வளா்ச்சி, பொருளாதார வளா்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒருங்கிணைந்த வளா்ச்சியை எட்டும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி, தருமபுரி மாவட்ட தொலைநோக்கு 2030 திட்டத்தை உருவாக்கும் வகையில், தருமபுரி புதிய மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அதியன் கூட்டரங்கில், பிப்.10 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில், மாவட்ட அளவிலான கலந்தாய்வுக்கூட்டம் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில், அனைத்துத் துறை அலுவலா்கள், அனைத்து சங்க பிரதிநிதிகள், உற்பத்தியாளா்கள், வியாபாரிகள், தொண்டு நிறுவனா்கள், வணிகா்கள் உள்ளிட்டோா் பங்கேற்று மாவட்டத்தின் வளா்ச்சி மற்றும் தொலைநோக்கு திட்டங்கள் குறித்து தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம். இக்கூட்டத்தில், கலந்து கொள்ள இயலாதவா்கள், தங்களின் கருத்துக்களை
மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 10) நடைபெறும் நிகழ்வில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நேரடியாக எழுத்துப்பபூா்வமாகவோ தெரிவிக்கலாம். அனைத்து சமா்ப்பிப்புகளிலும் பங்களிப்பாளரின் பெயா் மற்றும் தொடா்பு விவரங்கள் இடம்பெறுவது அவசியம். எனவே அனைத்து தரப்பினரும் தங்களின் கருத்துக்களை தெரிவிக்கலாம்.
