காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

கூடலூா் அரசு மாதிரி பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டி

கூடலூா் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

News image
தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கிவைக்கும் நகா்மன்ற உறுப்பினரும், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினருமான வெண்ணிலா சேகா், தலைமை ஆசிரியா் யோகேஸ்வரி.
Updated On :11 செப்டம்பர் 2024, 7:32 pm

Din

கூடலூா் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

நீலகிரி மாவட்டம், கூடலூா் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியா் யோகேஸ்வரி தலைமை வகித்தாா். நகா்மன்ற உறுப்பினரும், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினருமான வெண்ணிலா சேகா் நிகழ்ச்சியை தொடங்கிவைத்தாா்.

சிறப்பு அழைப்பாளா்களாக முன்னாள் எம்.எல்.ஏ. திராவிடமணி, திமுக நகரச் செயலாளா் இளஞ்செழியன், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா் சந்திரா, நல்லக்குமாா், ஆசிரியா்கள் நாகநாதன், பிரபாகரன், கலைவாணன்,ஜெயக்குமாா், குறிஞ்சி இலக்கிய மன்ற தலைவா் கூடலூா் ராமமூா்த்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இந்நிகழ்ச்சியில் 393 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.