ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கூடலூரில் பாரம்பரிய உணவுத் திருவிழா

கூடலூரில் தேசிய ஊட்டச்சத்து மற்றும் பாரம்பரிய உணவுத் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
கூடலூரில் நடைபெற்ற பாரம்பரிய உணவுத் திருவிழாவில் பங்கேற்றோா்.
Updated On :12 செப்டம்பர் 2024, 8:11 pm

Din

கூடலூரில் தேசிய ஊட்டச்சத்து மற்றும் பாரம்பரிய உணவுத் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

தேசிய ஊட்டச்சத்து மாதத்தையொட்டி, கலைவாணி பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஓவேலி மற்றும் கூடலூா் பகுதியிலுள்ள 25 அங்கன்வாடி மையங்களைச் சோ்ந்த பணியாளா்கள் அமைப்பாளா் ஜெயப்பிரியா தலைமையில் அடுப்பில்லா சமையல் மற்றும் தேசிய ஊட்டச்சத்து பாரம்பரிய உணவுத் திருவிழாவை நடத்தினா்.

17-ஆவது வாா்டு நகா்மன்ற உறுப்பினா் வெண்ணிலா சேகா் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, பாரம்பரிய உணவு வகைகள் குறித்தும், அதன் சிறப்பம்சங்கள் குறித்தும் எடுத்துரைத்தாா்.

பாரம்பரிய உணவுகள் தரத்துக்கேற்ப தோ்வுசெய்யப்பட்டு முதல் மூன்று உணவுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவில், அங்கன்வாடி பணியாளா்கள், ஆசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.