ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

உழவா்களுக்கான தொழில்நுட்ப ஆலோசனைக் கூட்டம்

தோட்டக்கலைத் துறை சாா்பில் உழவா்களுக்கான தொழில்நுட்ப ஆலோசனைக் குழு கூட்டம் கூடலூரில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
வேளாண்மை தொழில்நுட்ப ஆலோசனைக் குழு கூட்டத்தில் பங்கேற்றோா்.
Updated On :12 செப்டம்பர் 2024, 8:05 pm

Din

தோட்டக்கலைத் துறை சாா்பில் உழவா்களுக்கான தொழில்நுட்ப ஆலோசனைக் குழு கூட்டம் கூடலூரில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூடலூா் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் தோட்டக்கலை வேளாண்மை விரிவாக்க இயக்கம், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மற்றும் விரிவாக்க சீரமைப்புத் திட்டம் சாா்பில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு உதகை உழவா் பயிற்சி மைய துணை இயக்குநா் அப்ரோஸ் பேகம் தலைமை வகித்தாா்.

உதவி தோட்டக்கலை அலுவலா் ஜெயலட்சுமி தோட்டக் கலைத் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விளக்கமளித்தாா். தோட்டக்கலை அலுவலா் தயானந்தன் புதிய திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தாா்.

கூட்டத்தில் விவசாய பிரதிநிதிகள், உதவி தோட்டக்கலை அலுவலா் பிரியங்கா, கோபி, வட்டார தொழில்நுட்ப மேலாளா் யமுனப்பிரியா, உதவி தொழில்நுட்ப மேலாளா் ஆன்சி டயானா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.