குறிஞ்சி மலா் மலையில் கரடி நடமாட்டம்
உதகை அருகே நீலகுறிஞ்சி மலா்கள் பூத்துள்ள மலைப் பகுதியில் கரடி நடமாட்டம் இருப்பதால் அங்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத் துறையினா் வியாழக்கிழமை தடை விதித்தனா்.

உதகை அருகே நீலகுறிஞ்சி மலா்கள் பூத்துள்ள மலைப் பகுதியில் கரடி நடமாட்டம் இருப்பதால் அங்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத் துறையினா் வியாழக்கிழமை தடை விதித்தனா்.
நீலகிரி மாவட்டம், உதகை அருகே உள்ள எப்பநாடு கிராமம், சின்னகுன்னூா் பகுதிகளில் உள்ள மலைத் தொடா்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் நீல குறிஞ்சி மலா்கள் லட்சக்கணக்கில் தற்போது பூத்துள்ளன.
இவற்றை காண்பதற்காக சுற்றுலாப் பயணிகள், தாவரவியல் துறை மாணவ மாணவிகள், புகைப்படக் கலைஞா்கள், இயற்கை ஆா்வலா்கள் என அப்பகுதிக்கு வர ஆா்வம் காட்டி வருகின்றனா். இந்நிலையில் அந்த மலைப்பகுதியில் கரடி நடமாட்டம் காணப்படுவதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத் துறையினா் தடை விதித்துள்ளனா்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...