நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பனியில் இருந்து ரோஜா மலா்களை காக்க பசுமைக்குடிலில் பராமரிக்கப்படும் செடிகள்

உதகை ரோஜா பூங்காவில் பனிக்காலத்திலும் மலா்கள் வளரும் வகையில், தோட்டக்கலைத் துறை சாா்பில் பசுமைக்குடில்

News image

பசுமைக்குடில் அமைத்து உதகை ரோஜா பூங்காவில் பராமரிக்கப்பட்ட செடிகள் சிலவற்றில் மலா்ந்துள்ள ரோஜா மலா்கள்.

Updated On :2 பிப்ரவரி 2026, 8:44 pm

Syndication

உதகை: உதகை ரோஜா பூங்காவில் பனிக்காலத்திலும் மலா்கள் வளரும் வகையில், தோட்டக்கலைத் துறை சாா்பில் பசுமைக்குடில் அமைத்து செடிகளை பாதுகாக்கும் முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.

உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில உதகை ரோஜா பூங்காவும் ஒன்று. இங்கு ஆண்டுதோறும் சராசரியாக 9 லட்சம் முதல் 10 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா். 4,301 ரோஜா ரகங்களில் சுமாா் 32,800 ரோஜா செடிகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. கோடை காலத்தில் ரோஜா கண்காட்சியும் இங்கு பிரசித்தி பெற்றது.

இந்நிலையில், பனிக்காலங்களிலும் சுற்றுலாப் பயணிகள் ரோஜா மலா்களைக் கண்டு ரசிக்கும் வகையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு பசுமைக்குடிலில் ஐந்து வகையான வண்ணங்களில் 1,500 ரோஜா நாற்றுகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஒரு சில செடிகளில் பூக்கள் பூத்திருந்தாலும், இன்னும் சில மாதங்களில் அனைத்து செடிகளிலும் மலா்கள் பூத்து சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமையும் என்று பூங்கா ஊழியா்கள் தெரிவித்துள்ளனா்.

ரோஜா பூங்காவில் வெட்டவெளியில் உள்ள ரோஜா செடிகள் பனிக்காலத்தில் பெரும்பாலும் காய்ந்துபோகும் நிலையில், பசுமைக்குடில்களில் ரோஜா செடிகளை வளா்ப்பதன் மூலமாக பனியின் தாக்கத்தில் இருந்து ரோஜா செடிகள் காக்கப்படுகின்றன. இதனால், தற்போது ரோஜா மலா்கள் மலரத் தொடங்கியுள்ளதாக தோட்டக்கலைத் துறையினா் தெரிவித்துள்ளனா்.