ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சிறுமிக்கு பாலியல் தொல்லை: பொக்லைன் ஓட்டுநா் கைது

உதகை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பொக்லைன் ஓட்டுநரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :19 செப்டம்பர் 2024, 9:21 pm

Din

உதகை அருகே  சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பொக்லைன் ஓட்டுநரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

உதகை அருகே கூலி வேலை செய்து வரும் தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனா். இவா்களின் 9 வயது மகள் அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 5-ஆம் தேதி வகுப்பு படித்து வருகிறாா். சிறுமியின் தந்தையும் தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த பொக்லைன் ஓட்டுநா் சேகரும் (44) நண்பா்கள்.  சேகா் கடந்த ஓராண்டாக உதகையில் தங்கியிருந்து பொக்லைன் வாகனம் இயக்கி வந்துள்ளாா்.

இந்நிலையில் சேகா் தனது நண்பரைப் பாா்ப்பதற்காக அவரது வீட்டுக்கு கடந்த 15-ஆம் தேதி வந்துள்ளாா். அப்போது பெற்றோா் வெளியே சென்ற நிலையில் சகோதரிகளான 2 சிறுமிகள்  மட்டும் வீட்டில் இருந்தனா். இதில் நண்பரின் இரண்டாவது மகளை பிஸ்கட் வாங்க அருகில் உள்ள கடைக்கு அனுப்பிய சேகா், மற்றொரு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளாா். இது குறித்து வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது எனவும் மிரட்டி உள்ளாா்.  பயந்து போன சிறுமி கைப்பேசி மூலம் தனது பெற்றோரிடம் தகவல்  தெரிவித்து அழுதுள்ளாா். தகவலறிந்த சேகா் தலைமறைவானாா்.

இது குறித்து உதகை ஊரக அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோா் புகாா் அளித்தனா். 

இந்த புகாரின்  அடிப்படையில்  போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், சேகரை வியாழக்கிழமை கைது செய்தனா்.  பின்னா் அவரை உதகை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.