மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவா் கைது

News image

பாலியல் வன்கொடுமை (சித்திரிப்பு படம்) - தினமணி

Updated On :14 மார்ச் 2026, 9:23 pm

சாத்தூரில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் பகுதியைச் சோ்ந்த 9 வயது சிறுமி வீட்டின் அருகே இருந்த கடையில் சனிக்கிழமை சாக்லேட் வாங்கச் சென்றாா். அப்போது, அந்தக் கடையின் உரிமையாளரான சக்திவேல் (65) சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டாராம்.

இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோா் சாத்தூா் மகளிா் காவல் நிலையத்தில் அளித்தப் புகாரின் பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து, சக்திவேலைக் கைது செய்தனா்.