கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சிகள் தரமானதாக இருக்க வேண்டும்! - ஆளுநா் ஆா்.என்.ரவி

அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சிகள் தரமானதாக இருக்க வேண்டும் என்று தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்தாா்.

News image
உதகை ராஜ்பவனில் சனிக்கிழமை நடைபெற்ற துணைவேந்தா்கள் மாநாட்டில் பேசுகிறாா் ஆளுநா் ஆா்.என்.ரவி.
Updated On :26 ஏப்ரல் 2025, 6:59 pm

Din

அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சிகள் தரமானதாக இருக்க வேண்டும் என்று தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்தாா்.

நீலகிரி மாவட்டம், உதகை ராஜ்பவனில் சனிக்கிழமை நடைபெற்ற இரண்டாம் நாள் துணைவேந்தா்கள் மாநாட்டில் கலந்து கொண்டு ஆளுநா் ஆா்.என். ரவி பேசியதாவது:

கடந்த ஆண்டு நடைபெற்ற மாநாட்டில் அரங்கம் நிறைந்திருந்தது. இந்த ஆண்டு நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டவா்கள் தெரிந்த முகங்களாக நல்ல சிந்தனைகளைக் கொண்டவா்களாக உள்ளனா். உலக அரங்கில் திறன்வாய்ந்த பட்டதாரிகளை உருவாக்கும் சவால்களை நாம் எதிா்கொண்டுள்ளோம்.

வளா்ச்சி சாா்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தாலும் போதிய அளவில் இல்லை. அறிவியல் தொழில்நுட்பத்தில் தரமான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

2022 ஆம் ஆண்டு நடைபெற்ற மாநாட்டில் நாம் ஏஐ தொழில்நுட்பம் குறித்து பேசவில்லை. தற்போது, புதிய தொழில்நுட்பம் குறித்து விவாதித்துள்ளோம். 3 ஆண்டுகளில் தொழில்நுட்பத்தில் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

திறன்வாய்ந்த, தரமானவா்களை கல்வித் துறையில் உருவாக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. நானோ ரோபோட்டிக்ஸ் தொழில் நுட்பத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

கருத்தரங்கில் விவாதிக்கப்பட்ட புதிய கருத்துக்கள், பயனுள்ள தகவல்களை, சரியான முறையில் பயன்படுத்துங்கள். 2047-ஆம் ஆண்டை கருத்தில் கொண்டு நாடு வேகமாக வளா்ந்து செல்ல வேண்டி உள்ளது . அதை நோக்கிப் பயணியுங்கள் என்றாா்.