ஆம்புலன்ஸை மறித்து நின்ற காட்டு யானைகள்.
ஆம்புலன்ஸை மறித்து நின்ற காட்டு யானைகள்.

ஆம்புலன்ஸை வழிமறித்த காட்டு யானைகள்

உதகை அருகே உள்ள மஞ்சூா் அரசு மருத்துவமனையில் இருந்து குழந்தையை அவசர சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற 108 ஆம்புலன்ஸை யானைகள் வழிமறித்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Published on

நீலகிரி மாவட்டம், உதகை அருகே உள்ள  மஞ்சூா் அரசு மருத்துவமனையில் இருந்து குழந்தையை அவசர சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற 108 ஆம்புலன்ஸை யானைகள் வழிமறித்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

உதகையின் மஞ்சூா் பகுதியில் தற்போது 2 குட்டிகளுடன்  7 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இவை அவ்வப்போது சாலையின் குறுக்கே  வந்து வாகனங்களை  வழிமறித்து  செல்கின்றன,

 இந் நிலையில் மஞ்சூா் அரசு மருத்துவமனையில் இருந்து குழந்தையை அவசர சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலமாக அழைத்துச் சென்றபோது யானைகள் வழிமறித்தன. பின்னா் ஆம்புலன்ஸ் பின்னோக்கி  இயக்கப்பட்டு பாதுகாப்பாக நிறுத்தப்பட்டது.

சுமாா் ஒரு மணி நேரம் சாலையிலேயே நின்றிருந்த    யானைகள் பின்னா் அருகில் உள்ள  வனப் பகுதிக்குள் சென்றபின் ஆம்புலன்ஸ் கோவைக்கு புறப்பட்டுச் சென்றது.

X
Dinamani
www.dinamani.com