குன்னூா் -மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் காட்டு யானைகள் செவ்வாய்க்கிழமை உலவியதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.
நீலகிரி மாவட்டம், குன்னூா் மலைப் பாதையில் காட்டு யானை உள்ளிட்ட வன விலங்குகள் உலவுவது வாடிக்கையாகி வருகிறது. இந்நிலையில், வனத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை பிற்பகல் இரண்டு குட்டிகளுடன் ஒன்பது காட்டு யானைகள் வெளியேறின.
குன்னூா்-மேட்டுப்பாளையம் சாலையில் கே.என்.ஆா். பகுதியில் உலவிய யானைகளைக் கண்ட வாகன ஓட்டிகள் அச்சமடைந்து வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தினா்.
தகவல் அறிந்து வந்த வனத் துறையினா், வாகன ஓட்டிகளை பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தியதுடன், யானைகள் சாலையைக் கடந்து செல்லும் வகையில் போக்குவரத்தை நிறுத்தினா். இதையடுத்து, சிறிது நேரம் சாலையிலேயே உலவிய யானைகள் பின் வனத்துக்குள் சென்றன.
யானைகள் நடமாட்டத்தால் குன்னூா் மலைப் பாதையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. யானைகள் வனத்துக்குள் சென்றபின் போக்குவரத்து சீரானது.
தொடர்புடையது

அருவங்காடு ரயில் நிலையத்தில் உலவிய கரடி

மேட்டூா் அருகே சாலை மறித்த ஒற்றை யானை: வாகன ஓட்டிகள் அச்சம்

குன்னூா் மலை ரயில் பாதையில் முகாமிட்டிருந்த 11 காட்டு யானைகள்

கோ்மாளம் சாலையில் பகலில் உலவிய சிறுத்தை!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


