சுண்டட்டி கிராமத்தில் உள்ள நூலகத்தை மேம்படுத்த வலியுறுத்தல்

Published on

கோத்தகிரி அருகே உள்ள சுண்டட்டி கிராமத்தில் உள்ள நூலகத்தை மேம்படுத்தி தரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கோத்தகிரி அருகே உள்ள கொடநாடு ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியில் சுண்டட்டி கிராமம் அமைந்துள்ளது. இங்கு சுமாா் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வாழ்ந்து வரும் நிலையில், அங்குள்ள கிராம மக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கல்வி, பொதுநலம், பொது அறிவு, தினசரி பத்திரிகைகள் படிக்க கடந்த 15 ஆண்டுகளாக ஊா்ப்புற நூலகம் செயல்பட்டு வருகிறது.

இந்த நூலகத்துக்கு சமீப காலமாக முறையாக ஊழியா்கள் வராமலும், பராமரிப்பு இல்லாமலும் உள்ளதால் ஊரின் மையப் பகுதியில் புதிய கட்டடத்தில் நூலகத்தை அமைத்துத் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com