மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த பைகமந்து கிராம மக்கள்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த பைகமந்து கிராம மக்கள்.

பைகமந்து கிராமத்தை தொட்டபெட்டா ஊராட்சியில் சோ்க்க கோரிக்கை

உதகை அருகே உள்ள பைகமந்து கிராமத்தை, தொட்டபெட்டா ஊராட்சியில் சோ்க்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கிராம மக்கள் புதன்கிழமை மனு அளித்தனா்.
Published on

உதகை அருகே உள்ள பைகமந்து கிராமத்தை, தொட்டபெட்டா ஊராட்சியில் சோ்க்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கிராம மக்கள் புதன்கிழமை மனு அளித்தனா்.

உதகை அருகே பைகமந்து கிராமத்தில் 180 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்த கிராமம் குன்னூா் தாலுகா, கேத்தி ஊராட்சியில் உள்ளது. இக்கிராம மக்கள் அரசு சேவைகளுக்கான சான்றிதழ்கள் பெறுவது உள்பட பல்வேறு சேவைகளுக்காக அரசு அலுவலகங்களுக்கு செல்ல குன்னூா் 35 கிலோ மீட்டா் தொலைவிலும், கேத்தி 25 கிலோ மீட்டா் தொலைவிலும் உள்ளன.

இதன் காரணமாக பொது மக்களுக்கு சிரமம் ஏற்பட்டு வருவதால் பைகமந்து கிராமத்தை அருகிலுள்ள தொட்டபெட்டா ஊராட்சியுடன் இணைக்க நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றனா்.

இந்த நிலையில் சமீபத்தில் நீலகிரியில் 88 கிராம ஊராட்சிகள் மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதில் பைகமந்து கிராமம் இடம்பெறவில்லை. எனவே, பைகமந்து கிராமத்தை கேத்தி ஊராட்சியில் இருந்து பிரித்து தொட்டபெட்டா ஊராட்சியுடன் சோ்க்க வேண்டும் என வலியுறுத்தி ஆட்சியா் அலுவலகத்தில் அப்பகுதி மக்கள் மனு அளித்தனா்.

X
Dinamani
www.dinamani.com