உதகை அருகே உள்ள பைகமந்த் பகுதியில் புதன்கிழமை உலவிய சிறுத்தை.
நீலகிரி
உதகை அருகே சிறுத்தை நடமாட்டம்
உதகை அருகே உள்ள பைகமந்த் பகுதியில் புதன்கிழமை சுற்றித்திரிந்த சிறுத்தையால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
உதகை அருகே உள்ள பைகமந்த் பகுதியில் புதன்கிழமை சுற்றித்திரிந்த சிறுத்தையால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூா், கோத்தகிரி, கூடலூா் உள்ளிட்ட பகுதிகளுக்குள்பட்ட குடியிருப்புக்கு அருகே சமீப காலமாக வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் உதகை அருகே பைகமந்த் குடியிருப்புப் பகுதியிலுள்ள சாலையில் சிறுத்தை சுற்றித்திரிந்தது சிசிடிவி கேமராவில் பதிவாகி இருப்பது தெரியவந்ததுள்ளது.
இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா். வனத் துறையினா் கூண்டு வைத்து சிறுத்தையைப் பிடித்து அடா்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

