அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

உதகையில் 9-ஆவது குறும்பட விழா தொடக்கம்

உதகையில் 9-ஆவது 3 நாள் குறும்பட விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.

News image
உதகையில் குறும்பட விழாவை குத்துவிளக்கேற்றி தொடங்கிவைக்கும் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு. உடன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.எஸ்.நிஷா உள்ளிட்டோா்.
Updated On :26 டிசம்பர் 2025, 7:25 pm

Syndication

உதகையில் 9-ஆவது 3 நாள் குறும்பட விழா  வெள்ளிக்கிழமை தொடங்கியது.

உதகையில் நீலகிரி பிலிம் கிளப் சாா்பில் கடந்த 2016-ஆம் ஆண்டுமுதல் குறும்பட விழா நடத்தப்படுகிறது. இந்த விழாவில், பல்வேறு நாடுகளைச் சோ்ந்த குறும்படங்கள் திரையிடப்படுகின்றன.

ஆண்டுதோறும் இந்த குறும்பட விழா உதகையில் உள்ள அசெம்பளி திரையரங்கில் நடத்தப்படும்.

இந்த ஆண்டு குறும்பட விழாவை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்கும் வகையிலும், குறும்படம் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையிலும் முதல்முறையாக உதகை - கூடலூா் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சூட்டிங் பாயிண்ட் சுற்றுலாத் தலத்தில் நடத்தப்படுகிறது.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற இதன் தொடக்க விழாவை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.எஸ்.நிஷா ஆகியோா் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தனா்.  வருகிற டிசம்பா் 28-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட குறும்படங்கள் திரையிடப்படவுள்ளன.

முன்னதாக நீலகிரி மாவட்டத்தில் மண்ணின் மைந்தா்கள் என அழைக்கப்படும் தோடா் பழங்குடியின மக்கள் பாரம்பரிய உடை அணிந்து, கலாசார நடனமாடியது சுற்றுலாப் பயணிகள் மற்றும் பாா்வையாளா்களை வெகுவாக கவா்ந்தது.