உதகையில் தொடரும் உறை பனி
நீலகிரி மாவட்டம் உதகையில் தொடரும் உறை பணியால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அவதிக்குள்ளாகினா்.


நீலகிரி மாவட்டம் உதகையில் தொடரும் உறை பணியால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அவதிக்குள்ளாகினா்.
நீலகிரி மாவட்டம், உதகையில் கடந்த 2 நாள்களாக பல்வேறு இடங்களில் பனியின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் உதகையில் நீா்நிலைகள் அருகே உள்ள புல்தரை மைதானங்கள், சூட்டிங் மட்டம், தாவரவியல் பூங்கா, மாா்க்கெட் பகுதி, குதிரை பந்தய மைதானம், படகு இல்லம் ஆகிய இடங்களில் பனியின் தாக்கம் கடந்த சில நாள்களாக அதிகரித்து காணப்படுகிறது.
குறிப்பாக தாவரவியல் பூங்கா, அவலாஞ்சி ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை பதிவானது. உதகை பொ்ன் ஹில் பகுதியில் தனியாா் காட்டேஜில் பனியின் தாக்கம் காரணமாக தோட்டத்துக்கு தண்ணீா் பாய்ச்சும் குழாயை திறந்தபோது பனிக்கட்டிகள் வந்ததை சுற்றுலாப் பயணிகள் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பகிா்ந்து வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...