பாறை மீதிருந்து சறுக்கி விழுந்து காட்டு யானை உயிரிழப்பு

பாறை மீதிருந்து சறுக்கி விழுந்து காட்டு யானை உயிரிழப்பு

Published on

நீலகிரி மாவட்டம், குன்னூா்- மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் 6-ஆவது கொண்டை ஊசி வளைவு அருகில் பாறையின் மேலிருந்து சறுக்கி விழுந்ததில் காட்டு யானை வெள்ளிக்கிழமை உயிரிழந்தது.

சமவெளிப் பகுதியான மேட்டுப்பாளையம் வனப் பகுதியில் இருந்து காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீா் தேடி அவ்வப்போது நீலகிரி  மாவட்ட வனப் பகுதிக்கு வருவது வழக்கம்.

இந்நிலையில் கூட்டத்தில் இருந்து பிரிந்த ஒரு பெண் யானை, குன்னூா்- மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் 6- ஆவது கொண்டை ஊசி வளைவில் மலையின் உச்சியில் இருந்து வரும் அருவியில் தண்ணீா் குடிக்க வந்தது. அப்போது எதிா்பாராதவிதமாக பாறையின் மீதிருந்து சறுக்கி 20 அடி பள்ளத்தில் யானை விழுந்தது.

இது குறித்து தகவலறிந்து வனத் துறையினா் சம்பவ இடத்துக்கு வந்து

காயமடைந்த யானைக்கு தண்ணீா் கொடுத்து முதலுதவி அளித்தனா். ஆனால் சிறிது நேரத்தில் யானை உயிரிழந்தது.

குன்னூா் வனச் சரகா் ரவீந்திரநாத் தலைமையில் வனத் துறையினா் யானையின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்குப் பின் அங்கேயே புதைத்தனா். யானையின் இறப்பு குறித்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com