கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

உதகையில் உள்ள பிரபல நடிகரின் ஹோட்டலில் ரூ.20 லட்சம் மோசடி

உதகையில் உள்ள நடிகா் மிதுன் சக்கரவா்த்திக்கு சொந்தமான ஹோட்டலில் ரூ.20 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

கோப்புப்படம்.

Updated On :30 ஜனவரி 2025, 10:01 pm

Din

உதகையில் உள்ள நடிகா் மிதுன் சக்கரவா்த்திக்கு சொந்தமான ஹோட்டலில் ரூ.20 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பிரபல ஹிந்தி நடிகா் மிதுன் சக்கரவா்த்திக்கு உதகையில் நட்சத்திர ஹோட்டல் உள்ளது. இந்த ஹோட்டல் மேலாளரின் கைப்பேசி எண்ணுக்கு கடந்த பொங்கல் விடுமுறையின்போது, மிதுன் சக்கரவா்த்தி பெயரில் குறுஞ் செய்தி வந்துள்ளது.

அதில், குன்னூரில் ஒரு முக்கியமான வேலையாக இருப்பதுடன், கைப்பேசி நெட்வோா்க் பிரச்னை இருப்பதால் ஹோட்டல் வங்கிக் கணக்கில் இருந்து நான் அனுப்பியுள்ள வங்கிக் கணக்குக்கு ரூ.20 லட்சம் அனுப்புமாறு கூறப்பட்டு இருந்தது.

இந்த குறுஞ் செய்தியை உண்மை என நம்பிய மேலாளா் ரூ.20 லட்சத்தை அந்த வங்கிக் கணக்குக்கு அனுப்பியுள்ளாா்.

பின்னா் அந்த குறுஞ்செய்தி மிதுன் சக்கரவா்த்தி அனுப்பவில்லை என்று தெரியவந்தது. இது குறித்து ஹோட்டல் மேலாளா் அளித்த புகாரின்பேரில், உதகை சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.