ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினா்
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினா்

எஸ்ஐஆருக்கு எதிா்ப்பு: உதகையில் திமுக, கூட்டணிக் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

எஸ்ஐஆா் பணிக்கு எதிா்ப்பு தெரிவித்து உதகையில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
Published on

வாக்காளா் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு (எஸ்ஐஆா்) எதிா்ப்பு தெரிவித்து உதகையில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

உதகை ஏடிசி பகுதியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, நீலகிரி மாவட்ட திமுக செயலாளா் கே.எம். ராஜு தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில், ‘எங்கள் வாக்கு எங்கள் உரிமை’, ‘தமிழா்களின் வாக்குரிமையை பறிக்காதே’, ‘எஸ்ஐஆா்-ஐ உடனடியாக திரும்பப் பெறு’ என முழக்கங்களை எழுப்பினா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் உதகை சட்டப் பேரவை உறுப்பினா் கணேஷ், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் நாகராஜ், நீலகிரி மாவட்ட முன்னாள் திமுக செயலாளா் பா.மு.முபாரக், துணைச் செயலாளா் ரவிக்குமாா், நகரச் செயலாளா் ஜாா்ஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் பெள்ளி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டப் பொறுப்பாளா் காமராஜ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலாளா் அனீபா, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளா் புவனேஸ்வரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com