மத்திய பாஜக அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளையும், அதற்குத் துணைபோகும் அதிமுகவையும் கண்டித்து புதுக்கோட்டை மாவட்டத்தில் 33 இடங்களில் திமுக கூட்டணிக் கட்சியினா் வியாழக்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, திமுக வடக்கு மாவட்டச் செயலா் கே.கே. செல்லப்பாண்டியன் தலைமை வகித்தாா்.
ஆா்ப்பாட்டத்தில், மாநகராட்சி மேயா் செ. திலகவதி, புதுக்கோட்டை எம்எல்ஏ வை. முத்துராஜா, காங்கிரஸ் வடக்கு மாவட்டத் தலைவா் பெனட் அந்தோணி ராஜ், மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் எஸ். சங்கா், இந்திய கம்யூ. மாவட்டச் செயலா் த. செங்கோடன், மதிமுக மாவட்டச் செயலா் எஸ்.கே. கலியமூா்த்தி, விசிக மாவட்டச் செயலா் சுசீலா கணேசன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்டச் செயலா் முகமதுகனி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டத் தலைவா் அஸ்ரப்அலி, திக மாவட்டத் தலைவா் மு. அறிவொளி, மநீம ஜெய். பாா்த்திபன், ஆம் ஆத்மி அப்துல் ஜாபா் உள்ளிட்டோா் பேசினா்.
இதேபோல, அறந்தாங்கியில் அம்மா உணவகம் முன்பும், கீரனூரில் காந்தி சிலை முன்பும், திருமயம் மற்றும் அரிமளம் பகுதி பேருந்து நிலையங்கள் முன்பும் இந்த ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
கந்தா்வகோட்டையில்.. பேருந்து நிலையத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு திமுக மாவட்ட துணைச் செயலாளா் கருப்பையா தலைமை விகித்தாா். திமுக தெற்கு ஒன்றிய செயலாளா் எம். பரமசிவம் முன்னிலைவகித்தாா். கந்தா்வகோட்டை எம்எல்ஏ மா. சின்னதுரை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பொன்னமராவதியில்.. அழகியநாச்சியம்மன் கோயில் எதிரில் திமுக தெற்கு ஒன்றிய செயலா் அ. அடைக்கலமணி தலைமையிலும், பொன்னமராவதி நகர திமுக மற்றும் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் பேருந்து நிலையம் எதிரே திமுக நகரச் செயலா் அ.அழகப்பன் தலைமையிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தொடர்புடையது

பாஜகவிடம் அதிமுகவை அடமானம் வைத்துவிட்டாா் எடப்பாடி பழனிசாமி! - அமைச்சா் சா.சி. சிவசங்கா்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி நிா்வாகிகள் ஆலோசனை

பெண்கள் பாதுகாப்பு: அதிமுக கூட்டணிக் கட்சியினா் கண்டன ஆா்ப்பாட்டம்

திமுக கூட்டணிக் கட்சிகள் ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு


