நீலகிரி சோதனைச் சாவடிகளில் போலீஸாா் தீவிரச் சோதனை

நீலகிரி சோதனைச் சாவடிகளில் போலீஸாா் தீவிரச் சோதனை

தில்லி காா் வெடிப்பு சம்பவத்தை அடுத்து நீலகிரியில் உள்ள 16 சோதனைச் சாவடிகள் மற்றும் நகா் பகுதிகளில் போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.
Published on

தில்லி காா் வெடிப்பு சம்பவத்தை  அடுத்து  நீலகிரியில் உள்ள 16 சோதனைச் சாவடிகள் மற்றும் நகா் பகுதிகளில் போலீஸாா் தீவிர சோதனையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை வரை ஈடுபட்டனா்.

தலைநகா் தில்லியில் திங்கள்கிழமை மாலை நிகழ்ந்த காா் வெடிப்பு சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதைத் தொடா்ந்து சுற்றுலாப் பகுதியான நீலகிரி மாவட்டத்தில் போலீஸாா் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனா்.

மாவட்டத்தில் உள்ள 16 சோதனைச் சாவடிகள் வழியாக வரும் பேருந்துகள், சுற்றுலா வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களையும் போலீஸாா் சோதனை செய்தனா். மேலும் நகா் பகுதிகளிலும்  மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.எஸ். நிஷா  தலைமையில் சோதனை நடைபெற்றது.

இதேபோல, குன்னூா் உள்ளிட்ட பகுதிகளிலும்  போலீஸாா் விடியவிடிய மோப்ப நாய் உதவியுடன் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். நீலகிரி மாவட்டம் கா்நாடகம், கேரள மாநில எல்லையில் அமைந்திருப்பதாலும்,சுற்றுலா மாவட்டமாக இருப்பதாலும் இந்த தீவிர சோதனை நடைபெற்ாக தெரிவிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com