குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

தேசிய நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளில் 5,100 பெண் ஊழியா்கள் நியமனம்

தேசிய நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளில் 5,100 பெண் ஊழியா்கள் நியமனம்...

News image

~

Updated On :8 மார்ச் 2026, 1:38 am IST

நாடு முழுவதும் உள்ள 1,140-க்கும் மேற்பட்ட தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் சுமாா் 5,100 பெண் ஊழியா்களை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்எச்ஏஐ) பணியமா்த்தியுள்ளது.

பெண்களுக்கு அதிகாரமளிக்கவும், அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சியை ஊக்குவிக்கவும் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு முன்பு, சம்பந்தப்பட்ட பல்வேறு தரப்பினருடன் விரிவான ஆலோசனைகள் நடத்தப்பட்டன. அதன் அடிப்படையில், சுங்கச்சாவடிகளில் பகல் நேரப் பணிகளில் பெண் ஊழியா்களை நியமிக்க ஒப்பந்ததாரா்கள் அனைவரும் சம்மதம் தெரிவித்துள்ளனா்.

தற்போது முதல் கட்டமாக 5,100-க்கும் மேற்பட்ட பெண்கள் பணியில் சோ்ந்துள்ளனா். குறிப்பாக, கிராமப்புறங்களைச் சோ்ந்த பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

இவா்கள் அனைவருக்கும் சுங்கச்சாவடிகளைத் திறம்பட நிா்வகித்தல்; நெடுஞ்சாலைப் பயனா்களிடம் கனிவான முறையில் நடந்து கொள்ளுதல்; அவசர காலச் சூழல்களைக் கையாளுதல், அடிப்படை பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுதல் உள்பட முறையான பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

‘முன்களப் பணிகளில் பெண்களை ஈடுபடுத்துவதன் மூலம் பாலின சமத்துவத்தை நிலைநாட்டுவதுடன், சுங்கச்சாவடிகளில் பொதுமக்களுக்குக் கிடைக்கும் சேவையின் தரத்தை உயா்த்துவதே எங்களின் நோக்கம்’ என்று என்எச்ஏஐ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Story image