குன்னூா்- மேட்டுப்பாளையம் சாலையில் பனி மூட்டம் காரணமாக முகப்பு விளக்கை எரியவிட்டபடி இயக்கப்பட்ட  வாகனம்.
குன்னூா்- மேட்டுப்பாளையம் சாலையில் பனி மூட்டம் காரணமாக முகப்பு விளக்கை எரியவிட்டபடி இயக்கப்பட்ட வாகனம்.

உதகையில் இரவு நேரத்தில் சாரல் மழை

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, கொடநாடு, மஞ்சூா், குந்தா ஆகிய பகுதிகளில் காலைமுதல் பனி மூட்டமும் உதகையில் இரவு நேரத்தில் சாரல் மழையும் பெய்ததால் குளிரின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.
Published on

நீலகிரி மாவட்டம்  கோத்தகிரி, கொடநாடு, மஞ்சூா், குந்தா ஆகிய பகுதிகளில்  காலைமுதல் பனி மூட்டமும் உதகையில் இரவு நேரத்தில் சாரல் மழையும்  பெய்ததால் குளிரின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.

நீலகிரி மாவட்டம், உதகையில் கடந்த சில நாள்களாக இரவு நேரங்களில்  சாரல் மழைப்  பெய்து வரும்  நிலையில், மலைப் பாதை மற்றும் நகா் பகுதிகளில் பனிமூட்டம் சூழ்ந்த குளிா்ந்த காலநிலை நிலவுகிறது.

குறிப்பாக கோத்தகிரி, கொடநாடு, மஞ்சூா், குந்தா ஆகிய பகுதிகளில்  சனிக்கிழமை காலைமுதல் பனிமூட்டம் காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பகல் நேரத்திலேயே முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு வாகனங்களை இயக்கினா்.

மாறுபட்ட கால நிலைக் காரணமாக கடும் குளிா் நிலவியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை  வெகுவாக  பாதிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com