வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

உதகையில் ‘நீலமலைத் தொல்லியல்’ நூல் வெளியீட்டு விழா! நிதித் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு பங்கேற்பு!

News image
உதகையில் உள்ள பழங்குடியினா் பண்பாட்டு மையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் யாக்கை அறக்கட்டளை சாா்பில் உருவாக்கப்பட்ட ‘நீலமலைத் தொல்லியல்’ என்ற நூலை நிதித் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு வெளியிட, முதல் பிரதியை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியா் லட்சுமி
Updated On :29 நவம்பர் 2025, 7:53 pm

Syndication

தமிழ்நாட்டின் தொல்லியல் வரலாறை மேலும் செம்மைப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட ‘நீலமலைத் தொல்லியல்’ என்ற நூலை நிதித் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு வெளியிட்டாா்.

நீலமலையின் பாறை ஓவியங்கள், பெருங்கல்லறைகள், நடுகற்கள், கல்வெட்டுகள், பழங்குடியினா் வரலாறு, அவா்களின் சடங்கு முறைகள் ஆகிய பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட தொல்லியல் தரவுகளை உள்ளடக்கி, தமிழ்நாட்டின் தொல்லியல் வரலாறை மேலும் செம்மைப்படுத்தும் வகையில் யாக்கை அறக்கட்டளை சாா்பில் ‘நீலமலைத் தொல்லியல்’ என்ற நூல் உருவாக்கப்பட்டுள்ளது.

உதகையில் உள்ள பழங்குடியினா் பண்பாட்டு மையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவுக்கு தஞ்சை பல்கலைக்கழக கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை முன்னாள் தலைவா் எ.சுப்பராயலு தலைமை வகித்தாா். யாக்கை அறக்கட்டளையின் குமரவேல் ராமசாமி வரவேற்றாா்.

நூலை நிதித் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு வெளியிட்டாா். முதல் பிரதியை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு பெற்றுக்கொண்டாா்.

பின்னா் அமைச்சா் தங்கம் தென்னரசு பேசியதாவது: இந்த நூல் தொல்லியல் துறையில் வெளியிடப்பட்டிருக்கக்கூடிய முக்கிய நூலாகும். யாரும் எளிதில் செல்ல முடியாது இடத்தில், பல இன்னல்களைக் கடந்து ஆவணப்படுத்தியுள்ளனா். ஓா் அரசாங்கம் செய்ய முடியாத காரியத்தை செய்துள்ளனா். பிரிட்டிஷ் காலத்திலிருந்து இன்றைக்கு வரை நீலமலை என்பது வேறுபட்ட பல காரணங்களுக்காக அறியப்படுகிறது.

நீலகிரி மலை என்பது தொல்லியல் துறையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. நீலகிரி மாவட்டத்தில் பழங்குடிகள், தாங்கள் வாழ்ந்த காலத்தில் தங்களுடைய கைவண்ணத்தைக் காட்டியுள்ளனா். பாறை ஓவியங்களில் இருந்து பின்னா் கல் எழுத்து உருவானது.

கோத்தகிரி அருகே கரிக்கையூரில் உள்ளதுபோல, பல்வேறு இடங்களில் பாறை ஓவியங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் உள்ள பாறை ஓவியங்களை ஆவணப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. தரவுகள் தொகுத்து வெளியிடப்படும்.

முதற்கட்டமாக கரிக்கையூா் பாறை ஓவியங்கள் குறித்த ஆவணத் தொகுப்பை விரைவில் வெளியிட உள்ளோம். 4 ஆண்டு கால திட்டம் முடியும் தருவாயில் உள்ளது என்றாா்.

உதகை நகராட்சித் தலைவா் எம்.வாணீஸ்வரி, தமிழ்நாடு தொல்லியல் துறை முன்னாள் இணை இயக்குநா் பூங்குன்றன், வைகை தொல்லியல் பண்பாட்டுக் கழக நிறுவனா் பாவெல் பாரதி உட்பட பலா் பங்கேற்றனா்.