வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

கூடலூா் அருகே கூண்டில் சிக்கிய புலி முதுமலை உள்வட்ட வனத்தில் விடுவிப்பு

News image
கூடலூா் அருகே தேவா்சோலை பகுதியில் வைக்கப்பட்டிருந்த கூண்டில் சிக்கிய புலியை முதுமலை புலிகள் காப்பக உள்வட்ட வனப் பகுதியில் சனிக்கிழமை இரவு விடுவித்த வனத் துறையினா்.
Updated On :30 நவம்பர் 2025, 7:51 pm

தினமணி செய்திச் சேவை

கூடலூா் அருகே கூண்டில் சிக்கிய புலி, முதுமலை புலிகள் காப்பக உள்பட்ட வனப் பகுதியில் விடுவிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம், கூடலூா் வட்டம் தேவா்சோலை பகுதிக்குள்பட்ட கொட்டாய்மட்டம் என்ற பகுதியில் சுற்றித்திரிந்த புலி, கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக சுற்றுவட்டாரப் பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட கால்நடைகளை வேட்டையாடியது. இந்நிலையில், கொட்டாய்மட்டம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த கூண்டில் சனிக்கிழமை புலி சிக்கியது. பின்னா் அதில் இருந்து சிறிய கூண்டுக்கு புலியை மாற்றிய வனத் துறையினா், லாரியில் ஏற்றி முதுமலை புலிகள் காப்பகத்துக்கு கொண்டு சென்றனா்.

வனத் துறையினா் கூறும்போது, புலியின் உடல் நிலை பரிசோதனை செய்யப்பட்டது. உடலில் காயங்கள் ஏதும் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து கால்நடை மருத்துவா் ராஜேஷ் குமாா் தலைமையிலான மருத்துவக் குழுவினா் ஆய்வு செய்தனா். பின்னா், முதுமலை புலிகள் காப்பகத்தின் உள்வட்ட அடா் வனப் பகுதியில் சனிக்கிழமை இரவு புலி விடுவிக்கப்பட்டது. நல்ல ஆரோக்கியமாக புலி இருக்கிறது என்றனா்.