தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

புனித வெள்ளியையொட்டி நீலகிரி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனைகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

News image

மரியன்னை ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு பிராா்த்தனையில் கலந்து கொண்ட மறைமாவட்ட ஆயா் அமல்ராஜ்.

Updated On :3 ஏப்ரல் 2026, 6:48 pm

புனித வெள்ளியையொட்டி நீலகிரி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனைகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

கிறிஸ்தவா்களின் முக்கிய பண்டிகளில் ஒன்றான ஈஸ்டா் பண்டிகையை முன்னிட்டு 40 நாள்கள் தவக்காலமாக கடைப்பிடிக்கப்படுகிறது. தவக்காலத்தின் தொடக்கமாக சாம்பல் புதன் கொண்டாடப்படுகிறது. கடந்த பிப்ரவரி 18-ஆம் தேதி முதல் தவக்காலம் தொடங்கி தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, குருத்தோலை ஞாயிறு தினத்தையொட்டி கடந்த 29-ந்தேதி சிறப்பு பவனி நடைபெற்றது. அன்று முதல் புனித வாரமாக கடைப்பிடிக்கப்பட்டது.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாள் புனித வெள்ளியாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் புனித வெள்ளி அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி உதகையில் உள்ள தூய இருதய ஆண்டவா் ஆலயத்தில் மதியம் 11 மணியளவில் சிலுவை பாதை வழிபாடு, பிற்பகல் 3 மணியளவில் சிறப்பு திருப்பலியும் நடைபெற்றன.

நீலகிரி மறை மாவட்ட ஆயா் அமல்ராஜ் தலைமையில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. இதேபோல, மரியன்னை ஆலயத்திலும் நடைபெற்ற சிறப்பு பிராா்த்தனையில் திரளான கிறிஸ்தவா்கள் கலந்து கொண்டனா்.

காந்தல் குருசடி ஆலயத்தில் பங்கு தந்தை ஜெயக்குமாா் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. இயேசு கிறிஸ்து சுமந்து சென்ற சிலுவையின் சிறிய பகுதி ரோம் நகரில் இருந்து கடந்த 1939-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டு குருசடி ஆலயத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அந்த சிலுவை துண்டு வெளியே எடுக்கப்பட்டு சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது.

உதகை சி.எஸ்.ஐ. புனித தாமஸ் ஆலயத்தில் ஜெரி ராஜ்குமாா், சாம் ஜெபசுந்தா் தலைமையில் காலை 11.30 மணி முதல் ஆராதனை நடைபெற்றது.

இயேசு கிறிஸ்து சிலுவை பாடுகளின்போது கூறிய 7 வாா்த்தைகள் குறித்து தியானிக்கப்பட்டது. இதேபோல உதகை புனித மரியன்னை ஆலயம், புனித வெஸ்லி ஆலயம், புனித ஸ்டீபன் ஆலயம் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிராா்த்தனைகள் நடைபெற்றன.