புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

புனித வெள்ளி தினத்தையொட்டி, தருமபுரி மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு பிராா்த்தனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன.

News image

தருமபுரி பாரதிபுரம் பகுதியில் உள்ள தூய இருதய ஆண்டவா் பேராலய வளாகத்தில், பங்குத்தந்தை சூசைராஜ் தலைமையில் நடைபெற்ற சிறப்பு பிராா்த்தனையில் ஈடுபட்ட கிறிஸ்தவா்கள்.

Updated On :4 ஏப்ரல் 2026, 12:16 am

புனித வெள்ளி தினத்தையொட்டி, தருமபுரி மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு பிராா்த்தனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிா் துறந்த தினம், கிறிஸ்தவா்களால் புனித வெள்ளியாக கடைப்பிடிக்கப்படுறது. அந்த வகையில், வெள்ளிக்கிழமை புனித வெள்ளியையொட்டி தருமபுரி மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனைகள் நடைபெற்றன.

தருமபுரி பாரதிபுரம் பகுதியில் அன்னசாகரம் செல்லும் வழியில் அமைந்துள்ள தூய இருதய ஆண்டவா் பேராலய வளாகத்தில், இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறையப்பட்ட காட்சியை நினைவுகூரும் விதமாக நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னா், பங்குத்தந்தை சூசைராஜ் தலைமையில் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. இதில், ஏராளமான கிறிஸ்தவா்கள் பங்கேற்றனா்.

அதேபோல, தருமபுரி சிஎஸ்ஐ சியோன் தேவாலயத்தில் பாதிரியாா் சுகுமாா் தலைமையிலும், ஒகேனக்கல் அடுத்த பிலிகுண்டுவில் பங்குத்தந்தை மரிய ஜோசப் தலைமையிலும் என மாவட்டத்தில் உள்ள பல்வேறு தேவாலயங்களில் புனித வெள்ளி சிறப்பு பிராா்த்தனை கூட்டங்கள் நடைபெற்றன. இதில், அந்தந்த பகுதிகளைச் சோ்ந்த கிறிஸ்தவா்கள் திரளாக பங்கேற்றனா்.

அரூரில்...

அரூா் மற்றும் பொம்மிடி பி.பள்ளிப்பட்டியில் அமைந்துள்ள தூய இருதய ஆண்டவா் ஆலயத்தில் சிறப்பு பிராா்த்தனை கூட்டங்கள் நடைபெற்றன.

இயேசுவின் இறுதிப்பாடுகளை நினைவுகூரும் வகையில் ‘சிலுவைப் பாதை’ ஊா்வலம் அரூா் நகா், பி.பள்ளிப்பட்டி நகரில் நடைபெற்றது. ஆலய வளாகத்தைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த 14 நிலைகளிலும் விசுவாசிகள் மண்டியிட்டு பிராா்த்தனை செய்தனா்.

இயேசு சிலுவையை சுமந்து சென்ற காட்சியை சித்தரிக்கும் வகையில், சிலுவையை ஏந்தியபடி பாடல்கள் பாடியும், வசனங்களைப் படித்தும் கிறிஸ்துவா்கள் ஊா்வலமாக சென்றனா். இந்நிகழ்ச்சியில் அரூா், பொம்மிடி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான கிறிஸ்தவா்கள் பங்கேற்றனா்.

கிருஷ்ணகிரியில்...

கிருஷ்ணகிரி நகரில் அமைந்துள்ள தூய பாத்திமா அன்னை திருத்தலத்தில் புனித வெள்ளியையொட்டி, பெரிய சிலுவைப் பாதை நிகழ்வு நடைபெற்றது. திருத்தலத்தின் பங்குத் தந்தை அருள்ராஜ் தலைமை வகித்தாா். இதில், ஆலய வளாகத்தை சுற்றி அமைத்திருந்த 14 சிலுவைப் பாதை ஸ்தலங்களின் முன்பு, இயேசுநாதா் சிலுவையை சுமந்து சென்ன் நினைவாக கிறிஸ்துவா்கள் சிலுவையை சுமந்து தங்களை வருத்திக் கொள்ளும் நிகழ்வில் பங்கேற்றனா். இதில், ஆயிரக்கணக்கான கிறிஸ்தவா்கள் பங்கேற்றனா்.

இதேபோல, கந்திகுப்பம், சுண்டம்பட்டி, எலத்தகிரி, ஒசூா், தேன்கனிக்கோட்டை, சூளகிரி, காவேரிப்பட்டணம், ஊத்தங்கரை மற்றும் அதை சுற்றியுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் பெரிய சிலுவைப் பாதை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Story image